எந்த தெய்வத்தை எந்த கிழமையில் வழிபடுவது??
வாரத்தின் ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு கடவுளுக்கு அர்பணிக்கப்பட்டுள்ளது. அதனால் எந்த கடவுளை எந்த நாளன்று தரிசிக்க வேண்டும் என்பதை தெரிந்து கொள்ளுங்கள்.
திங்கள்:
திங்கட்கிழமை
சிவனுக்கு உகந்த தினங்களுள் ஒன்றாகும். திங்கள் நீலகண்டனை விரதமிருந்து வழிபட
உகந்த நாளாக கருதப்படுகிறது. திங்களன்று சிவபெருமானுக்கு பால், அரிசி மற்றும் சர்க்கரை
படைத்திடலாம்.
செவ்வாய்:
ஹனுமரை
செவ்வாய் கிழமைகளில் விரதமிருந்து வழிபடலாம். மேலும், துர்க்கை அம்மனுக்கும் மிகவும்
உகந்த நாளாகும். செவ்வாய் கிழமைகளில் விரதமிருந்து ராகு காலத்தில் எலுமிச்சை
விளக்கு போட்டு வந்தால் வாழ்க்கை வளம் பெரும்.
புதன்:
விநாயகரை
விரதமிருந்து வழிபட புதனே உகந்த தினமாக கருதப்படுகிறது. எந்த ஒரு காரியத்தை
தொடங்குவதாக இருந்தாலும் முதலில் விநாயகரை வணங்கி விட்டுதான் தொடங்கவேண்டும்.
வியாழன்:
விஷ்ணு
பகவானை பொதுவாக வியாழக்கிழமை அன்று விரதமிருந்து வழிபடுவார்கள். விஷ்ணு பகவானின்
மனைவியான லக்ஷ்மி தேவியை வணங்கவும் இதுவே உகந்த நாள்.
அதேபோல
வியாழக்கிழமைகளில் தட்சணாமூர்த்தி (குரு) வழிபட உகந்த நாளாகும்.
வெள்ளி:
துர்க்கை
அம்மனையும் அவரது அவதாரங்களையும் வெள்ளிக்கிழமை விரதமிருந்து வழிபட வேண்டும். இந்த
நாளில் அம்மனின் அனைத்து அவதாரங்களையும் ஒன்றாகவும் வழிபடலாம்.
சனி:
சனிக்கிழமை
சனி கிரகத்தை சார்ந்ததாகும். சனிக்கிழமைகளில் விரதமிருந்து சனி பகவான், பெருமாள், ஆஞ்சநேயர் மற்றும் காளி தேவியை
வழிபடலாம்.
ஞாயிறு:
நவகிரகத்தின்
முதன்மையான கடவுளான சூரிய பகவானை ஞாயிறு அன்று விரதமிருந்து வழிபடுவது உகந்தது.
சூரிய தோஷம் இருப்பவர்கள் இந்த நாட்களில் விரதமிருந்து வழிபட்டால் இன்னல்கள்
தீரும் என நம்பப்படுகிறது.
Source : http://tamil.webdunia.com/article/religious-news-in-tamil/best-days-to-worship-god-117041400016_1.htm
Post a Comment