கண் திருஷ்டி நீங்க பரிகாரம்!
பொறாமைத் தீ எனப்படும் திருஷ்டி தோஷம் போக்க :
* குடும்பத்தில் இருக்கும் அனைவரின் தோசம் நீங்க, தெருமண் கொஞ்சம் எடுத்து கடுகு,உப்பு,மூன்று மிளகாய், எல்லாம் சேர்த்து கிழக்கு பார்த்து அமர்ந்து மூன்று முறை எல்லோரையும் சுற்றி எரியும் விறகு அடுப்பில் போட்டுவிடவேண்டும். இது கண் திருஷ்டியை போக்கும் இதை செவ்வாய் வெள்ளி அல்லது ஞாயிற்றுக்கிழமையில் செய்வார்கள்.
* எப்படிபட்டவர் வீட்டிற்குள் வந்து சென்றாலும் சுகம் கொடுக்க கூடியது சீரகம் என்று சித்தர்கள் வழிகாட்டி சென்று உள்ளார்கள். எனவே ஒவ்வொருவர் வீட்டிலும் விருந்து நடைபெறும் காலங்களில் கருப்பட்டி கலந்த சீரக பானகம் தயாரித்து வீட்டிற்கு வந்தவர்களுக்கு கொடுத்தால் விஷப் பார்வை உள்ளவர்களின் திருஷ்டி தோஷம் விலகும்.
* திருஷ்டி தோஷம் விட்டினுள் அதிகமாக இருந்தால், அல்லது கஷ்டமாக இருந்தாலும் இந்த சீரகமும், கருப்பட்டியும் கலந்த பானகம் தயாரித்து அதனை உங்கள் பகுதியில் உள்ள துர்க்கை அம்மன் ஆலயத்துக்கு எடுத்து சென்று அங்கு உள்ள பக்தர்களுக்கும், ஏழை எளியவர்களுக்கும் கொடுக்க, திருஷ்டி தோஷம் விலகும்.
Post a Comment