தமிழர்களின் பாரம்பரிய நடனங்கள்


காவடி ஆட்டம்


முருகப்பெருமானை துதிக்கும் பக்தர்களால் முறைப்படி அழகாக வில் வடிவில் அமைக்கப்பட்ட ஒருவகை பொருளாகும். இதனை தலையில் சுமந்து ஆடும் ஆட்டமே காவடி எனப்படுகின்றது


தப்பாட்டம் 


தப்பாட்டம் என்பது தமிழர்களின் பாரம்பரியமான நடனம் ஆகும். பறையாட்டம் உணர்ச்சி மிக்கது மற்றும் எழுச்சி மிகுந்தது

மயில்  ஆட்டம்


இது மயிலின் தோகையை உடையுடன் சேர்த்து, ஒடுக்கியும் விரித்தும் ஆடக்கூடியவாறு உடை செய்யப்பட்டிருக்கும். இது தமிழரின் நாட்டார் ஆடற் கலையாகும். 

தேவராட்டம் 

தலைப்பில் தலைப்பா கட்டி, இடுப்பில்துண்டு கட்டி ஆடுவர். உருமி மேளம், பறை மேளம் ஆகியவை தேவராட்டத்தின் போது பயன்படுத்தும் இசைகளாக இருக்கின்றன. இது தேவர், கம்பளத்து நாயக்கர் எனும் சமூகத்தினரின் கோவில் விழாக்களிலும், வீட்டுவிழாக்களிலும் இந்த நடனம் இல்லாமல் இருப்பதில்லை. இதை ஒருசடங்காகவே வைத்திருக்கின்றனர். 

கரகாட்டம் 

தலையில் பல விதங்களில் அலங்கரிக்கப்பட்ட கரகத்தை வைத்தபடி, சமநிலை பேணிஆடும் இது பாரம்பிய ஆட்டங்களில் ஒன்றாகும். கரகம் என்பது ஒரு பானை வடிவ கமண்டலத்தைக் குறிக்கும். சங்க இலக்கியங்களில் கரகாட்டம் குடக்கூத்து என்று குறிப்பிடப்பட்டுள்ளது

பொய்கால் குதிரையாட்டம் 

குதிரைக் கூடு அணிந்து அதன் மேல் சவாரி செய்வது போல் பாங்கு செய்து ஆடப்படும் ஆட்டம் பொய்க்கால் குதிரை ஆட்டம் ஆகும். கால்களில் உயரமான தடிகளைக் கட்டிக் கொண்டும் ஆடப்படிகின்றது. 

பரதநாட்டியம் 

இன்று பரத நாட்டியம் என அழைக்கப்பட்டாலும் ஆரம்பக்காலங்களில் சதிராட்டம் என்றே அழைக்கப்பட்டது. 

தெருக்குத்து 

இது தமிழர்களின் பழங்கலைகளில் ஒன்று ஆகும். கதை சொல்லல், நாடகம், ஆடல், பாடல் என பலதரப்பட்ட அம்சங்கள் தெருக்கூத்தில் கலந்திருக்கும். 

உறுமியாட்டம் 

நம்முடைய நாட்டுப்புற கலைகளில் முக்கிய வாத்தியம் இந்த உறுமி மேளம். விலங்குகள் உறுமுவதைப் போன்று ஒலியை எழுப்பக் கூடிய இசைக்கருவி என்பதால் உறுமி என்று பெயர் வந்திருக்கலாம்.

புலியாட்டம் 


புலி போன்று வேடமிட்டு ஆடப்படும் ஆட்டம் புலி ஆட்டம் ஆகும். வரிப் புலிபோல் மஞ்சள், கறுப்பு, இளஞ்சிகப்பு வண்ண பூச்சுக்களால் உடலைப் பூசுவர்.




Powered by Blogger.