
பனைவெல்லம், கருப்பட்டி, வெல்லம், தேன், கரும்புச்சாறு போன்றவை நம்
முன்னோர்கள் பயன்படுத்திய இனிப்பு பொருள்களாகும். ஆனால் அவை இப்போது
அழியும் நிலையில் உள்ளது. பெரும்பாலும் கரும்பை இன்று அதிக அளவில் காகிதம்
தயாரிக்க மட்டுமே பயன்படுத்துகிறார்கள். கரும்பிலிருந்து இப்போது வெல்லம்
தயாரிப்பது குறைவான அளவில் உள்ளது.

கரும்புச்சாறிலிருந்து சுத்தமாகத் தயாராகின்ற சர்க்கரையைத் தான் நாம்
பயன்படுத்திக் கொண்டிருக்கிறோம் என்று நினைத்தால், உலகத்திலேயே நாம் தான்
முட்டாள்கள். வெள்ளையா இருக்கிறவன் பொய் சொல்லமாட்டன் என்ற நகைச்சுவையைப்
போலவே, வெள்ளையாக உள்ள நம் மனதைக் கொள்ளை கொள்ளும் சர்க்கரையில் நிறைய
தீமைகள் உள்ளது. அதைப் பற்றி இங்கு பார்ப்போம்.
சர்க்கரையின் தீமைகள் :

உலக அளவில் 10 சதவீதம் நீரிழிவு நோயாளிகளில் இந்தியர்களும் ஒருவராக
இருக்கின்றனர். முன்பு எல்லாம் 40 வயதுக்கு மேல்தான் நீரிழிவு போன்றப்
பிரச்சனை வரும். ஆனால், இப்போது 20 வயதிலேயே சர்க்கரை நோய் வந்துவிடுவதைப்
பார்க்கிறோம். இதற்கு மூல காரணமே நாம் அன்றாடம் பயன்படுத்துகிற சர்க்கரை
தான் காரணமாகும்.

ஜூஸ் வகைகளில் சர்க்கரை சேர்ப்பதும் தவறான பழக்கம் ஆகும். இயற்கையாகவே
பழங்களில் அதிக அளவில் சர்க்கரை இருக்கிறது. அதில் இன்னும் சர்க்கரையை
சேர்ப்பது ஆரோக்கியத்திற்கு கேடு விளைவிக்கக்கூடியதாகும். இதுபோன்ற சின்னச்
சின்ன விஷயங்களில் சர்க்கரைப் பயன்படுத்துவதை தவிர்ப்பதன் மூலம் சர்க்கரை
நோய்களை நம்மை அண்டாமல் பாதுகாக்க முடியும்.

வெள்ளைச் சர்க்கரையை அளவுக்கு அதிகமாக பயன்படுத்துவதால் வயிற்றிற்கு இரு
பக்கமும் கொழுப்பு சேர்ந்து அதிக உடல் எடை அதிகரிக்கும். மேலும் பலவித உடல்
பிரச்சனைகளையும் உருவாக்கும்.
Sources : WhatsApp
Post a Comment