வாழை இலையை எப்படிப் போடுவது ...


இராமாயண காலத்தில், ஒரு முறை ராமன் சாப்பிடும்போது , அனுமனையும் தன்னுடன் ஒரே இலையில் சாப்பிடச் சொன்னாராம் . இருவரும் எதிர் எதிராக அமர்ந்திருந்தார்களாம் . அப்போதுதான் அணில் முதுகில் கோடு போட்ட மாதிரி, வாழை இலையின் நடுவிலும் தனது கையால் ஒரு கோட்டைக் கிழித்தாராம் ராமன்.  ராமர் இருந்த பக்கத்தில் மனிதர்கள் விரும்பி சாப்பிடும் உணவு வகைகளும், அனுமன் இருந்த எதிர் பகுதியில் குரங்குகள் விரும்பிச் சாப்பிடும் காய்கறிகளும் பரிமாறப்பட்டதாம் .  அப்படி பரிமாறிய அந்தப் பழக்கம்தான், இன்னும் நம்மிடையே தொன்று தொட்டு தொடர்ந்து வருகிறதாம் . புராண காலங்களில் வாழை இலையின் நடுவில் கோடு கிடையாதாம்.
இலையின் நுனி, சாப்பிட அமர்ந்திருப்பவருக்கு இடது கை பக்கமாக வருகிற மாதிரி போட வேண்டும். நாம் சாப்பிடும்போது, வலது கையால் பிசைந்து சாப்பிடுவதால், இலையின் வலது பக்கம் அதிக இடம் தேவை.  உப்பு, ஊறுகாய், இனிப்பு இதையெல்லாம் ஓவராக சாப்பிட்டால் உடம்புக்கு ஒத்துக் கொள்ளாது. கொஞ்சமாகத்தான் சாப்பிட வேண்டும். அதனால்தான் இலையின் குறுகலான இடது பாகத்தில் இட ஒதுக்கீடு. சாதம், காய் கறிகள் இவற்றையெல்லாம் நிறைய சாப்பிடலாம். அதனால் அவற்றை இலையின் அகலமான வலது பக்கத்தில் பரிமாற வேண்டும்.
இலையில் முதலில் இனிப்பு பரிமாறப்படுவதற்கு முக்கியமான காரணம் இருக்கிறது. நாம் இனிப்பை எடுத்து வாயில் வைத்த அடுத்த நொடியில், அந்த இனிப்பு , உடனடியாக உமிழ் நீருடன் கரைந்து, ரத்தத்தில் கலந்து மூளைக்குச் சென்று, வயிற்றில் ஜீரண சக்திக்கு தேவையான அமிலங்களை சுரக்க செய்ய உத்தரவிடுகிறது . அதனால்தான் ஜீரணம் எளிதாக நடை பெறுகிறது. இலையைப் போடுவதிலிருந்து, எப்படி பரிமாறுவது, எதை முதலில் சாப்பிடுவது எல்லாவற்றையும் முறையாக வகுத்துத் தந்திருக்கும் நம் முன்னோரின் அறிவு வியக்கத்தக்கது.
Powered by Blogger.