எதிர்மறை அதிர்வுகளை நீக்கும் மாவிலை தோரணம் !

பண்டிகை நாட்களில் மட்டுமல்லாமல் அடிக்கடி தலைவாசலில் 
Image result for maavilai

மாவிலை தோரணம் கட்டுவது வாஸ்து குறைபாடுகளை விரைவில் நீக்கும். எதிர்மறை அதிர்வுகளை  நீக்கும். நச்சுக் காற்றை சுத்தப்படுத்தும். லட்சுமி கடாஷம் உண்டாகும்

மாவிலை காற்றை சுத்தம் செய்து புதிய உற்சாகத்தை கொடுக்கும். கலசத்தில் வைக்கப்படும் மாவிலைக்கு நீரில் உள்ள கிருமிகளை சுத்தம் செய்யும் சக்தி உண்டு. அது கலச நீரை  தூய்மை படுத்தி அதிக அளவு ஆக்சிஜன் வெளியிட்டு கொண்டிருக்கும்.

பல விதமான மக்கள் கூடும் விசேஷங்களில் நெகடிவ் சக்திகளை களைந்து நல்ல ஆரோகியமான சூழல் ஏற்படுத்தும் சக்தி மாவிலைக்கு  உள்ளது.  மாவிலைகளுக்கு இன்னொரு தனிச்சிறப்பு உண்டு. மரத்திலிருந்து வெட்டப்பட்ட பின்னரும் கூட சுற்றுச்சூழலை பாதுகாக்கும் சக்தி மாவிலைகளுக்கு உண்டு என்கிறார்கள். அலங்காரத்துக்கு மட்டுமல்லாமல், ஆரோக்கியத்துக்கும் உதவுகிறது மாவிலை. மாவிலை காய்ந்தாலும் அதன் சக்தி  குறையாது.


தலைவாயிலில் இருக்கும் வாக்தேவதையின் காதில் எதிர்மறை வார்த்தைகள் விழாது தடுக்கும்.  மாமரத்தின் பதினொறு இலையை வளர்பிறையில் சனிக்கிழமை அன்று கட்டவேண்டும். இந்த சனிக்கிழமையில் கட்டினால் அடுத்த  சனிக்கிழமை கழட்டிவிட வேண்டும். பிளஸ்டிக் மாவிலைகளை தொங்கவிடக்கூடாது.

Source : tamil.webdunia.com
Powered by Blogger.