டெங்கு காய்ச்சலை குணப்படுத்தும் நிலவேம்பு குடிநீர் தயாரிப்பது எப்படி...?

Image result for நிலவேம்பு குடிநீர்
டெங்கு உள்ளிட்ட காய்ச்சல்களுக்கு தடுப்பு மருந்தாக நிலவேம்பு குடிநீர் பயன்படுகிறது. டெங்கு  காய்ச்சலால் குறையும் தட்டணுக்களின் எண்ணிக்கையை அதிகரிக்க பப்பாளி இலைச்சாறு, ஆடா தொடை, மணப்பாகு பயன்படுகிறது.
நிலவேம்பு குடிநீர் பாரம்பரிய மற்றும் பாதுகாப்பான மருந்து. டெங்கு உள்ளிட்ட வைரஸ் காய்ச்சல்களுக்கு நிலவேம்பு குடிநீர் பயன்படுத்தலாம். நிலவேம்பு குடிநீரால் பக்க விளைவுகள் எதுவும் ஏற்படாது. 
நிலவேம்பு பொடியை கொண்டு கசாயம் தயாரித்து மட்டுமே குடிக்க வேண்டும். பொடியாக உட்கொள்ள கூடாது. கசாயம் தயாரித்த 3  மணி நேரத்தில் குடிக்க வேண்டும். அதன் பிறகு அதை குடிக்கக் கூடாது. புதிதாக தயாரித்து குடிக்க வேண்டும்.

டெங்கு காய்ச்சல் வந்தவர்கள் மட்டுமின்றி, சாதாரண காய்ச்சல் வந்தவர்களும் நிலவேம்புக் கஷாயம் அருந்தலாம். சித்த  வைத்திய மருந்துக்  கடைகளில் நிலவேம்பு கிடைக்கிறது. இது நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது, ரத்த தட்டு அணுக்களின் எண்ணிக்கையை அதிகரிக்கச்  செய்கிறது.
யாரிக்கும் முறை :-

இரண்டு டம்ளர் தண்ணீரை கொதிக்க வைத்துஅதனுடன் இரண்டு டீஸ்பூன் நிலவேம்பு பொடியை சேர்க்க‌ வேண்டும். இந்த கலவையானது அரை டம்ளர் அளவு வரும் வரை நன்றாக கொதிக்க வைக்கவும். பிறகு வடிக்கட்டி எடுத்தால் நிலவேம்பு குடிநீர்  தயார்.


ஒரு நாளில் இரண்டு வேளை உணவிற்கு முன்பு, குழந்தைகளுக்கு 30 மிலி அளவும், பெரியவர்களுக்கு 60 மிலி அளவும் குடிக்கவேண்டும். காய்ச்சல் உள்ளவர்கள் மருத்துவர் பரிந்துரையின் படி நாள்தோறும் குடிக்கவேண்டும் காய்ச்சல் அல்லாதவர்கள் மாதத்தில் ஒரு நாள் அல்லது  இரண்டு நாள் குடித்தால் காய்ச்சல் வராது.

Source : webdunia.com
Powered by Blogger.