மெட்டி அணிவதால் ஏற்படும் நன்மைகள்!
மெட்டி [மிஞ்சி] என்பது திருமணம் ஆன பெண்கள் அனைவரும் [அனைத்து சமூகத்தினரும்] அணியக்கூடியது ஆகும். மெட்டி அணியக்கூடிய சரியான விரல் கட்டை விரலுக்கு அடுத்த விரல். திருமணத்தின் போது ஆண்களுக்கும் மெட்டி அணிவிக்கப்படும். ஆனால் ஆண்கள் திருமணம் ஆன மூன்றாம் நாள் அதனை கழட்டிவிடுவார்கள். பெண்கள் மட்டுமே தொடர்ந்து அணிவார்கள்.
பெண்கள் மெட்டி அணிவது அவசியமானது ஆகும். பெண்கள் மெட்டி அணியும் கட்டைவிரலுக்கு அடுத்த விரலுக்கும் கர்ப்பப் பையிக்கும் தொடர்பு உண்டு. அந்த விரலின் வழியாக வரும் நரம்பு கர்ப்பப்பை செயல்படுவதற்க்கு உறுதுணையாக இருக்கிறது. அந்த விரலில் மெட்டி அணிவதன் மூலம் நரம்பு தூண்டப்பட்டு கர்ப்பப் பை முழுமையாக செயல்பட துணை செய்கிறது.
மெட்டியில் பல வகை உண்டு. ஆனால் சரியான மெட்டி என்பது வலையம் போல இருக்கும். ஒவ்வொரு விரலிலும் இரண்டு வலையம் போட வேண்டும். மூன்று விரலில் மெட்டி போடுவது தேவையற்றது. மெட்டியை மூன்று ஆண்டுகளுக்கு ஒருமுறை மாற்ற வேண்டும். மெட்டி வாங்க சரியான நாள் வெள்ளிக்கிழமை. மற்ற நாட்களில் வளர்பிறை நாட்களில் வாங்கலாம். பெண்கள் பிறந்த வீட்டிற்கு போகும் போது அவர்களை வாங்கித்தரச் சொல்லி மாற்றுவது மிகவும் சிறப்பு. மெட்டி அணியும்போது கிழக்கு முகமாக நின்று அணிந்து கொள்ள வேண்டும்.
Post a Comment